முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 11, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 11, 2018

  • இந்தியா பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் அதிபர் இமாணுவேல் மேக்ரான் இந்தியா வந்திருந்தபோது ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (CRPF) படை உருவாக்கப்பட்டு 49 ஆண்டுகள் தின விழா – உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தில் நடைபெற்றது. CRPF படை குறித்த புத்தகம் ஒன்றை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
  • GST இணைய வழி ரசீது – ஏப்ரல் 1 முதல் அமலாக்கம் 5 to 28ம% வரை 3 முறைகளில் GST வரி விதிக்கப்படுகிறது.
  • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க குறைந்த பட்ச வயது 21 என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • வங்கிகளுக்கான மூலதன பேசல் III கட்டுபாட்டு விதிகள் 31 மார்ச் 2019 க்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. பேசல் 3 விதிமுறைகள் ஏப்ரல் 1 2013 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை, தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில விதிகளுக்குட்பட்டு கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு அளித்துள்ளது.
  • தெலுங்கான அரசு 2018 ம் ஆண்டை தீவிபத்து இல்லா காடுகள் ஆண்டாக ‘Zero Forest Fire Year’ என அறிவித்துள்ளது.
  • சூரிய சக்தி ஆற்றல் செயல்பாட்டில் முழுமையான முதல் மத்திய ஆட்சிப் பகுதியின் டையூ அடைந்துள்ளது.
  • ‘National Legislates Conference’ தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
  • ‘Ex Samvedna’ எனும் விமானப் போர் பயிற்சி ஒத்திகை தென்னிந்திய விமானப் படையால் மார்ச் 12 முதல் 17 வரை நடைபெற இருக்கிறது.
  • ‘ஹெல்ப்’ (Help – Hydrocarbon Exploration and Licencing Policy) திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
  • அரசுப் பதவியில் ஒருவர் இருமுறை மட்டுமே தொடர முடியும் என்ற பழைய நடைமுறை மாற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜீஜிங்பிங் சீனாவின் நிரந்தர அதிபராக பதவி வகிப்பதற்கான தடை விலகியுள்ளது.
  • நெதர்லாந்தின் வெஃகன்னிஜன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் மார் ஜொ லெய்ன் ஹெல்டல் தலைமையில் வாழும் தாவரத்தின் வேரிலிருந்து நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை கண்டறிந்துள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!