முக்கிய விதிகளும் கோட்பாடுகளும்

0

முக்கிய விதிகளும் கோட்பாடுகளும்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு:– ஒரு திடப்பொருள் திரவத்தில் மூழ்கியிருக்கும் போது எடையை இழப்பதாகத் தோன்றும். இழக்கப்படும் எடையானது அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.

அவகோட்ரா எண்:- சம கனஅளவுள்ள வாயுப் பொருட்கள் சம அளவிலான வெப்பநிலை மற்றும் அழுத்தத்துடன் காணப்படும்போது அவை சம அளவிலான மூலக்கூறு எண்களைப் பெற்றிருக்கும்.

கரும் பொருட்களின் கதிர்வீச்சு:- கரும் பொருட்கள் வெப்பம் அல்லது கதிர்வீச்சினை மற்ற நிறப் பொருட்களை விட எளிதில் உட்கவர்கின்றன.

கொதிநிலையில் ஏற்படும் மாற்றம்:– அழுத்தம் அதிகரித்தாலும் மாசுப் பொருட்களை சேர்த்தாலும் ஒரு பொருளின் கொதிநலை அதிகரிக்கிறது.

உறைநிலையில் ஏற்படும் மாற்றம்:- அழுத்தம் அதிகரித்தாலும் அல்லது மாசுப் பொருட்களை சேர்த்தாலும் ஒரு பொருளின் உருகுநிலை குறைகிறது.

பாயில்ஸ் விதி:- மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிறை கொண்ட வாயுவின் கொள்ளளவு (கன அளவு) அதன் அழுத்தத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும்.

புவியீர்ப்பு மையம்:- ஒரு பொருள் எந்த நிலையிலிருப்பினும் அதன் எடை முழுவதும் ஒரு புள்ளி வழியே செயல்படுகிறது. இப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.

சார்லஸ் விதி:- பருமன் மாறாதபோது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அழுத்தம் மாறாதபோது அதன் பருமனும் அதன் சார்விலா வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

 கூலூம் விதி:- இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட மின் விசையின் அளவு மின்னூட்டங்களின் பெருக்கற் பலனுக்கு நேர்த்தகவிலும்ää அவற்றின் இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

 டால்டன் விதி:- நிலையான கன அளவு கொண்ட கொள்கலனின் குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைபடா காற்றின் மொத்த அழுத்தமானது அதன் பகுதிப் பொருட்களின் அழுத்தத்திற்கு சமம் ஆகும்.

 டாப்ளர் விளைவு:- மூலத்திற்கு அய்வாளருக்கும் இடையே சார்பு இயக்கம் இருப்பதால் அதிர்வெண் மாறுவதாகத் தோன்றுகிறது.

 மின்னாற் பகுப்புக்கான ஃபாரடே விதிகள்:-

1. ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்புலம் மாறும் பொழுதெல்லாம் மின்னியக்க விசையும் மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப் புலம் மாற்றும் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டம் நீடிக்கும். இது பாரடேயின் முதல் விதி எனப்படும்.

2. தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் மதிப்புகள் காந்தப்பாய மாற்ற வீதத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். இது ஃபாரடேயின் இரண்டாம் விதி எனப்படும்.

 லென்(ஸ்) விதி:- தூண்டப்படும் மின்னியக்கு விசை மாற்றும் மின்னோட்டத்தின் திசைகள் அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.

 நியூட்டனின் பொது ஈர்ப்பு விதிகள்:- அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது. இது நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி எனப்படும்.

 நியூட்டனின் இயக்க விதிகள்:-

1. முதல் விதி:– ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருள் அல்லது சீரான திசைவேகத்தில் நேர்க்கோட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் புறவிசை ஒன்று அதன் மீது செயல்படாதவரை அதே நிலையில் தொடர்ந்து இருக்கும்.

2. இரண்டாம் விதி:- இயங்கும் பொருளின் உந்தம் மாறுவீதம் அதன் மீது செயல்படும் விசைக்கு நேர்விகிதத்திலும் அதே திசையிலும் இருக்கும்.

3. மூன்றாவது இயக்க விதி:– ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமானää ஆனால் எதிர் திசையில் உள்ள ஓர் எதிர் வினை உண்டு. வினையும் எதிர்வினையும் வௌ;வேறு பொருள்களின் மீது செயல்படுவதால் அவை ஒன்றையொன்று சமன் செய்வதில்லை. ஓய்வு நிலையிலிருக்கும் பொருள்ää இயக்க நிலையிலிருச்கும் பொருள் ஆகிய இரண்டிற்கும் மூன்றாவது இயக்க விதி பொருந்தும்.

 ஓம் விதி:- மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.

 பாஸ்கல் விதி:- அசையா நிலையிருக்கும் ஒரு திரவத்தில் ஒரு பகுதியில் செலுத்தப்படும் அழுத்தம் அத்திரவத்தின் எல்லாப் பகுதிகளிலும் அதே அளவில் செலுத்தப்படும்.

 ஒளி நியூட்டனின் துகள் கொள்கை:- ஒளியானது மிக நுண்ணிய நிறையற்ற மீள் சக்தியுள்ள ஒரு வகை துகள்களால் ஆனது. இது எல்லா திசைகளிலும் மிகுந்த திசைவேகத்துடன் நேர்க்கோட்டில் பரவுகிறது. (ஒளி அலைகளின் விளிம்பு விளைவு தள விளைவு ஆகியவற்றை இவரால் தெளிவுபடுத்த இயலவில்லை.

 பெர்னௌலி தேற்றம்:- வரிச்சீர் ஓட்டத்தில் பாகுநிலையற்றää அமுக்க இயலாத ஒரு திரவத்தினுள் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி.

 ஸ்நெல் விதி:- கொடுக்கப்பட்ட இரு ஊடகங்களுக்கு படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாயும்.

 ஆம்பியர் நீச்சல் விதி:- காந்த ஊசியை நோக்கி முகம் இருக்க ஒருவர் மின்னோட்டத்தின் திசையில் நீந்தினால் ஊசியின் வடமுனை அவரது இடக்கையை நோக்கி விலகும்.

 ஃப்ளமிங் இடக்கை விதி:- இடக்கையின் கட்டைவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகியவை ஒ;றுக்கொன்று செய்குத்தாக வைக்கப்படுகின்றன. புலத்திசையை சுட்டுவிரலும் மின்னோட்டத்தின் திசையை நடு விரலும் குறிப்பிட்டால் கட்டைவிரல் கடத்தி நகரும் திசையை (விசை) குறிக்கும்.

 கெப்ளர் விதிகள்:-

1. சுற்றுப்பாதை விதி:- கோள்கள் சூரியனை ஒரு குவியமாகக் கொண்டு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

2. பரப்புகளின் விதி:- ஒரு கோள் அதன் நீர் வட்டப் பாதையில் இயங்கும் போது சூ ரியனுக்கும் கோள்களுக்கும் இடையே வரையப்படும் கோடு சமகால அளவுகளில் சம பரப்பளவைக் கடக்கும்.
3. சுற்றுக்கால விதி:- கோள்களின் சுற்றுக்காலங்களின் இருமடிகள் சூரியனிலிருந்து அவற்றின் சராசரி தொலைவுகளின் மும்மடிக்கு நேர்விகிதத்தில் உள்ளன.

PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!