IDBI வங்கியில் 956 காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு
IDBI வங்கி ஆனது காலியாக உள்ள Executives பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IDBI Bank |
பணியின் பெயர் | Executives |
பணியிடங்கள் | 956 |
கடைசி தேதி | 04.08.2021 – 18.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
வங்கி வேலைவாய்ப்பு 2021 :
Executives பணிகளுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 956 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
IDBI Bank வயது வரம்பு :
பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
IDBI வங்கி கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s அல்லது Master’s Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Executives ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.29,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
IDBI தேர்வு செயல்முறை :
- பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இந்த ஆன்லைன் தேர்வுகள் வரும் 05.09.2021 நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
- SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.08.2021 முதல் 18.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.