மத்திய அரசில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ICMR ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Administrative Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 10 அளவில் (ரூ.56,100 – 1,77,500) ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR |
பணியின் பெயர் | Administrative Officer |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICMR காலிப்பணியிடங்கள்:
Administrative Officer பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Administrative Officer தகுதி:
மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், Level 7, Level 8 அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ICMR வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Administrative Officer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 10 அளவில் (ரூ.56,100 – 1,77,500) ஊதியம் வழங்கப்படும்
ICMR தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.