ICG இந்திய கடலோர காவல்படையில் புதிய வேலை – தேர்வு கிடையாது!
Store Keeper Grade I, Sarang Lascar ஆகிய பணிகளுக்கு என இந்திய கடலோர காவல்படையில் (ICG) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை (ICG) |
பணியின் பெயர் | Store Keeper Grade I, Sarang Lascar |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.01.2024 (With in 60 Days) |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய கடலோர காவல் படை பணியிடங்கள்:
இந்திய கடலோர காவல்படையில் (ICG) Store Keeper Grade I பணிக்கு என 02 பணியிடங்களும், Sarang Lascar பணிக்கு என 01 பணியிடமும் காலியாக உள்ளது.
ICG பணிக்கான தகுதி:
மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 01 / 02 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ICG வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
ICG சம்பள விவரம்:
இந்த ICG நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Pay Matrix Level – 04 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!
ICG தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICG விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த ICG நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 23.01.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்.