ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா – பின்தங்கிய இந்திய அணி!

0
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா - பின்தங்கிய இந்திய அணி!
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா - பின்தங்கிய இந்திய அணி!
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா – பின்தங்கிய இந்திய அணி!

2021 ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பு ICC டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 2வது இடத்தில் இருந்த இந்தியா பின்தங்கியுள்ளது.

ICC டெஸ்ட் தரவரிசை:

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக கோப்பை டெஸ்ட் தொடருக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2021 ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 2வது இடத்தில் இருந்த இந்திய அணி 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

தமிழகத்தில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

கடந்த ஆண்டு நடந்த ICC உலக கோப்பை டெஸ்ட் தொடருக்கான இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதை தொடர்ந்து இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய 2வது இடத்தை பிடித்து ஜனவரி 15 ஆம் தேதி முடிவடைந்த தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் வரைக்கும் நீடித்தது. தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் தோல்வியடைந்தது. இதனால் இந்தியா 3717 புள்ளிகள் பெற்று இருந்த போதிலும் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பணம் செலுத்தும் வழிமுறைகள்!

இங்கிலாந்து எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2736 புள்ளிகள் பெற்று 199 ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி 3264 புள்ளிகள் பெற்று 117 ரேட்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!