IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

IBPS ஆனது தற்போது முதன்மை (Main exam) தேர்வுக்கான தேர்வு முடிவுகளை சற்றுமுன் வெளியிட்டது. இது குறித்து கூடுதல் விவரங்களை கீழே வழங்கியுள்ளோம். தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் உங்கள் தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

IBPS Clerk தேர்வு முடிவுகள் வெளியீடு:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனும் IBPS ஆனது அரசு வங்கிகளுக்கு தேவையான மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து பணியமர்த்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து IBPS ஆனது கடந்த 2021ம் ஆண்டு 11 வங்கிகளுக்கு என கிளெர்க் (Clerk) பணிக்கு 7858 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முதல் கட்ட தேர்வு (Prelims Exam) 2021 ம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்து, அதற்கான முடிவுகள் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 25.01.2022 ம் தேதி அன்று நடைபெற்ற முதன்மை தேர்வுகளில் (Main exam) கலந்து கொண்டனர். தற்போது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனும் IBPS தனது இணையதளத்தில் முதன்மை (Main exam) தேர்வுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

முதன்மை (Main exam) தேர்வில் கலந்து கொண்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த தேர்வர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் IBPS இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்து கொண்டு பயனடையலாம். மேலும் இந்த தேர்வு முடிவுகளை 01.04.2022ம் தேதி முதல் 30.04.2022ம் தேதி வரை மட்டும் பார்க்க முடியும் என்று IBPS தெரிவித்துள்ளதால். தேர்வர்கள் உடனே தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Click Here for IBPS Clerk Mains Result

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!