PAN CARDல் திருத்தங்களை ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

0
PAN CARDல் திருத்தங்களை ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்வது எப்படி? - முழு விவரம் இதோ!
PAN CARDல் திருத்தங்களை ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்வது எப்படி? - முழு விவரம் இதோ!
PAN CARDல் திருத்தங்களை ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கும் நிலையில், அதில் உள்ள விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது கட்டாயம் ஆகும். இதனை ஆன்லைன் மூலம் எப்படி திருத்தம் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பான் கார்டு

இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வழங்கப்படுகிறது. இது ஒரு எண்ணெழுத்து குறியீடு ஆகும். இந்த பான் கார்டு தனிநபரின் நிதிப் பதிவேடு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல் போன்ற பல வகையான சேவைகளுக்கு அவசியம் ஆகும். இதனை ஒரு அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். அதனால் அதில் உள்ள விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டு இருப்பது கட்டாயம் ஆகும். குறிப்பாக எழுத்து பிழை, கையெப்பம் அல்லது புகைப்படம் தவறாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு.. இனி இப்படி பாடம் நடத்த கூடாது – முக்கிய தகவல்!

அதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்யலாம். அதற்கு முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதை பார்க்க வேண்டும். அதன் பின் அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் ’Change or Correction in PAN Data’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் ‘Category Type’ என்பதை தேர்வு செய்து அதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும். பின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின் புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாமல் தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

பின் ’Next for PAN Card Signature Change or Photo Update’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின் ஐடி, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்க, அதனை இணைக்க வேண்டும். பின் செக்பாக்ஸை டிக் செய்து ’Submit’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின் பணம் செலுத்தும் ஆப்சன் வரும், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்றுவதற்கு ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறையின் ஒப்புதலுக்காக 15 இலக்க எண் வரும். பின் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பான் சேவா பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!