மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

தற்போது மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட IDA ஊழியர்களுக்கு 184.1% அகவிலைப்படி (DA) விகிதம் பொருந்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

மத்திய அரசுத் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு 18 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை எப்போது அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்களின் துறை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டது. அதில் போர்டு லெவல் பதவிகள் உட்பட யூனியன் அல்லாத மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (cPSEs) 01.01.2007 திருத்தப்பட்ட கட்டணத்தில் IDA செலுத்துதல் குறித்து கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, ‘CPSEகளின் வாரிய நிலை மற்றும் அதற்கு கீழே உள்ள வாரிய நிலை நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கம் அல்லாத மேற்பார்வையாளர்களுக்கு செலுத்த வேண்டிய DA விகிதங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இப்போது, 2007 ஊதிய விகிதங்களுக்கு 01.01.2022 முதல் CPSE நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு செலுத்த வேண்டிய DA விகிதம் 184.1% ஆக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் (2007) அனுமதிக்கப்பட்டுள்ள IDA ஊழியர்களுக்கு 184.1% என்ற வீதத்தில் DA தொகை பொருந்தும் என அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

புது கெட்அப்பில் என்ட்ரி கொடுத்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இதனுடன் இந்திய அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக அமைச்சகங்களும், துறைகளும் தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள cPSEகளின் கவனத்திற்கு இந்த திருத்தத்தை கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத் தொகையை கொடுக்கும் முடிவை எடுக்க மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருவதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்படி நடந்தால் லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், லெவல்-13 அல்லது நிலை-14 ஊழியரின் DA தொகை ரூ.1,44,200 முதல் 2,18,200 ஆக இருக்கும் என்றும் தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!