புது கெட்அப்பில் என்ட்ரி கொடுத்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் புது கெட்டப்பில் புகழ் வந்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ அதிக லைக்குகளை பெற்று வருகிறது.
குக் வித் கோமாளி 3:
அதிக பரபரப்பாக நடக்க வேண்டிய சமையல் போட்டியை இந்த அளவிற்கு கலகலப்பாக மாற்ற முடியுமா என்று புது எண்ணத்தை கொண்டு வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த இரண்டு வருடங்களாக 2 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என்று அனைவரும் தங்களின் சமையல் பரிமாணத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
TN Job “FB
Group” Join Now
முதல் வாரத்திலேயே போட்டியாளர்களை மற்றும் கோமாளிகளை பற்றிய ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் புகழ் அதிக படவாய்ப்புகள் கிடைத்து மிகவும் பிசியாக இருப்பதால் குக் வித் கோமாளிக்கு வர மாட்டார் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் செஃப் தாமு அவர்கள் மட்டும் கட்டாயம் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவார் என்று கூறினார்.இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
மீனா அப்பாவிடம் மீண்டும் உதவி கேட்கும் ஜீவா, கடையை இடிக்க போவதாக சொன்ன போலீஸ்காரர் – இன்றைய எபிசோட்!
அதேபோல், நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் புகழ் வரவில்லை. ஆனால் இரண்டாம் வாரம் முதல் புகழ் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வரும் வாரத்தில் வெளியாக உள்ள எபிசோடில் புகழ் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். இதனால் செட்டில் இருக்கும் அனைவருமே புகழை கலாய்த்து வருகின்றனர்.