HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் HCL நிறுவனத்தில் தற்போது ஆப் கேம்பஸ் முறை மூலம் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பேரலை காரணமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோய் தொற்று குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் அனைத்து வகையான நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதே நேரத்தில் IT நிறுவன சேவைகளை பூர்த்தி செய்வதற்காக TCS, விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த நிதியாண்டு முடிவுக்குள் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இதனுடன் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்தில் அசோசியேட் கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் பதவிக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புககான கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட தகவல்கள் இந்தப் பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:
  • இணை ஆலோசகர்
  • ஆலோசகர்
  • தொழில்நுட்ப நிபுணர்
  • வழி நடத்துநர்.
  • நிபுணர்.
வேலை இடம்:

சென்னை, நொய்டா, புனே

தகுதி அளவுகோல்:

இணை ஆலோசகர் மற்றும் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 4.5 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு – இன்றைய நிலவரம்!

தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் நிபுணர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2.5 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை விளக்கம்:
  • இணை ஆலோசகர் பணியில் மதிப்பெண்கள், அட்ரிஷன் பகுப்பாய்வு போன்ற தொடர்புடைய உள்ளீடுகள் அல்லது தரவுகளை பெறுவதற்கு வெளிப்புற ஆலோசகர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆலோசகர் பணிக்கு 24 × 7 ஷிப்டுகளில் விண்ணப்பதாரர்கள் வேலை செய்ய வேண்டும். தவிர L 2 மாறுதல் L 3 டிராஃபிக் ஃபார்வர்டிங் மற்றும் சிஸ்கோ, ஜூனிபர், F 5 மற்றும் அரிஸ்டா தளங்களில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப நிபுணர் பணிக்கு ஸ்கை பாக்ஸ் பயர்வால் அஷ்யூரன்ஸ் தீர்வை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.
  • நிபுணர் பணிக்கு தகவல் பாதுகாப்பு நோக்கங்களை சுற்றி விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க நிலையான உள்ளடக்கத்தை புதுப்பிக்க விண்ணப்பதாரர் உதவ வேண்டும். தவிர அதிக ஆபத்துள்ள பயனர்களுக்கு மேம்பட்ட ஃபிஷிங் உருவகப்படுத்துதல்கள், போர் விளையாட்டுகள் போன்றவற்றை விண்ணப்பதாரர்கள் ஆதரிக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு:
  • HCL டெக்னாலஜிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • career பக்கத்திற்கு சென்று job notification என்பதை கொடுக்கவும்.
  • இப்போது விண்ணப்பப் பக்கம் திறக்கும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை கொடுக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!