மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 3% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 3% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் 3% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் ரூ.6,480 வரை சம்பள உயரும். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் விலைவாசி க்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 28% சதவீதமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. பிறகு மீண்டும் 3% உயர்த்தப்பட்டு 31% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2022ம் ஆண்டில் மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? அவரை பற்றிய முழு விவரம் இதோ!

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை தொகையை ஒரே தவணையில் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும். மேலும் இந்த தொகையானது ஜனவரி மாதமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை சம்பளம் ரூ.16,000 பெறும் அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 31 சதவீத அகவிலைப்படி ரூ.5,580 அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

ஜனவரி 18 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – திரையரங்குகளை 50% திறனுடன் இயக்க அனுமதி!

தற்போதைய தகவலின் படி மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 34% படி ஊழியர்களுக்கு மாதம் ரூ.6,120 வரை சம்பள உயர்வு கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி மாதம் ரூ.19,346 சம்பள உயர்வு கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாதத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!