கொரோனாவை விட 100 மடங்கு மோசமான H5N1 வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

0
கொரோனாவை விட 100 மடங்கு மோசமான H5N1 வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ஒட்டுமொத்த உலகத்திற்கும் மரண பயத்தை காட்டிய கொரோனா வைரசை காட்டிலும் 100 மடங்கு மோசமான வைரஸ் குறித்தான எச்சரிக்கையை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை அறிவிப்பு:

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலகின் மொத்த நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உலக மக்கள் அனைவருக்கும் மரண பயத்தை காட்டியது எனலாம். கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இறுதி சடங்குகளை செய்வதற்கு போதிய இடம் இல்லாமல் தவிக்கும் நிலையை மக்கள் அனுபவிக்க வேண்டியது வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றை விட 100 மடங்கு மோசமான வைரசாக அமெரிக்காவின் டெக்சாஸில் பரவி வரும் பறவை காய்ச்சல் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2003 முதல் தற்போது வரை H5N1 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் 52 சதவீதம் பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. டெக்ஸாஸில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மக்களை சோதித்த பின்னர் இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!