H3N2 வைரஸ் பரவல் எதிரொலி : கட்டாய முகக்கவசம்? – அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
H3N2 வைரஸ் பரவல் எதிரொலி : கட்டாய முகக்கவசம்? - அரசு வெளியிட்ட அறிவிப்பு!
H3N2 வைரஸ் பரவல் எதிரொலி : கட்டாய முகக்கவசம்? - அரசு வெளியிட்ட அறிவிப்பு!
H3N2 வைரஸ் பரவல் எதிரொலி : கட்டாய முகக்கவசம்? – அரசு வெளியிட்ட அறிவிப்பு!

நாடு முழுவதும் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்து கொண்டு வருவதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் H3N2 வைரஸ் பாதிப்பு கணிசமாக இருப்பதால் தற்போது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதற்கான திட்டமில்லை என டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

H3N2 வைரஸ்

நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் மற்றும் கொரோனா பரவலும் தற்போது சில மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு குறைவாக பதிவாகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கூறியதாவது, டெல்லியில் தற்போது H3N2 காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், அதிகரிக்கும் சமயத்தில் இதனை சமாளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்புளுயன்சா காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றிற்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் ஒரே மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

SSC MTS 2023 தேர்வுக்கு கொண்டிருப்பவர்களுக்கு Best Online Course – Test Pack உடன்! வெற்றி உறுதி!

இதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது, பொருட்களை தொடாமல் இருப்பது உள்ளிட்டவைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைகளை அடிக்கடி கழுவுதல், கண், வாய், மூக்குகளில் கைகள் கொண்டு அடிக்கடி தொடாமல் இருக்க வேண்டும். மேலும் தற்போது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!