Post Office & காசோலை சேவைகளுக்கு GST வரி விதிப்பு – மத்திய நிதியமைச்சகம் முடிவு!

0
Post Office & காசோலை சேவைகளுக்கு GST வரி விதிப்பு - மத்திய நிதியமைச்சகம் முடிவு!
Post Office & காசோலை சேவைகளுக்கு GST வரி விதிப்பு - மத்திய நிதியமைச்சகம் முடிவு!
Post Office & காசோலை சேவைகளுக்கு GST வரி விதிப்பு – மத்திய நிதியமைச்சகம் முடிவு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வரும் GST கூட்டத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முதல் ஆன்லைன் கேமிங் உள்ளிட்டவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை மாற்றியமைப்பது குறித்த ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

GST கூட்டம்

இன்று (ஜூன் 29) 2வது நாளாக நடைபெற்று வரும் GST கவுன்சில் கூட்டத்தில் மாநில அமைச்சகங்களின் பரிந்துரையின் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவான வாடகைக்கு கொடுக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க (GST) மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வரும் 47வது GST கூட்டம் சண்டிகரில் நேற்று (ஜூன் 28) துவங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு வரிகளை மாற்றியமைப்பது குறித்தும், புதிதாக வரி விதிப்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவான வாடகைக்கு கொடுக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க (GST) மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன் ஒரு நாளைக்கு ரூ.5000க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை அறைக்கு 5% GST வரி விதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம் மற்றும் 10 கிராமுக்கு குறைவான அஞ்சல்கள் தவிர மற்ற அனைத்து அஞ்சலக சேவைகள் GST வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசோலைகள் தனித்தனியாகவோ அல்லது புத்தகமாகவோ பெறுவதற்கு 18% வரி விதி அளிக்க மத்திய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய பயிற்சிகள் அறிமுகம்!

தொடர்ந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதற்கு கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உலர்ந்த பருப்பு, காய்கறிகள், சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்இடி விளக்குகள், அச்சிடுதல் அல்லது வரைதல் மை, சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட ஆகியவற்றுக்கான GST வரியை மாற்றியமைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம், கேசினோ ஆகியவற்றுக்கு 28% GST விதிக்கவும் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!