அரசு பள்ளிகள் கொரோனா உபகரணங்களை வாங்க நிர்பந்தம் – தலைமையாசிரியர்கள் தகவல்!!

0
அரசு பள்ளிகள் கொரோனா உபகரணங்களை வாங்க நிர்பந்தம் - தலைமையாசிரியர்கள் தகவல்!!
அரசு பள்ளிகள் கொரோனா உபகரணங்களை வாங்க நிர்பந்தம் - தலைமையாசிரியர்கள் தகவல்!!
அரசு பள்ளிகள் கொரோனா உபகரணங்களை வாங்க நிர்பந்தம் – தலைமையாசிரியர்கள் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை பராமரிப்பதற்காக அரசு வழங்கிய பணத்தில் 50% பணத்தை கோவிட் -19 பொருட்கள் வாங்க தனியார் நிறுவனம் நிர்பந்தம் செய்வதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பராமரிப்பு நிதி:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 வகையாக பள்ளிக்கு காசோலை மூலம் வழங்கியுள்ளது.

NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இதற்கான பராமரிப்பு விதிமுறைகளையும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் படி, பள்ளியில் உள்ள ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள், கழிவறை, மின்வசதி, குடிநீர் வசதி போன்ற வசதிகளை சரிபடுத்திக் கொள்ளவும், தற்போது கொரோனா பரவி வரும் சூழ்நிலையாக்க உள்ளதால் அதற்கான தடுப்பு உபகரணங்களையும் வாங்க அரசு உத்தரவிட்டது.

தனியார் நிறுவன தலையீடு:

அரசு பராமரிப்பு நிதியை பள்ளிகளுக்கு வழங்கிய அடுத்த நாளே சில தனியார் நிறுவனங்கள் தங்களிடம் தான் கோவிட் -19 தடுப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று பொருட்களை இறக்கி விட்டு அரசு வழங்கிய நிதியில் இருந்து 50% பணத்தை காசோலையாக கேட்கிறது என்று தலைமை ஆசிரியர்கள் கூறிவருகின்றனர்.

உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!

உயரதிகாரிகளின் பதில்:

இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களும் தனியார் நிறுவங்களிடம் வாங்குவதற்கான வாய்மொழி உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இதனால் பாதிப்படைய போவது தாங்கள் தான் என்றும், பொருட்கள் வாங்கிக் கொள்ளும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவரில் ரூ.1000 வைத்து அந்நிறுவனம் லஞ்சம் தருகிறது என்றும் தலைமை ஆசிரியர்கள் புகார் அளிக்கின்றனர்.

மேலும், நேர்மையானவர்கள் நிறுவனத்தினரை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். மாவட்டம் வாரியாக முறையான டெண்டர் விடுத்து குறைந்த விலைப்பட்டியல் அளிக்கும் நிறுவனங்களில் பொருட்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் தலைமை ஆசிரியர்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here