NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS கல்வி உதவித்தொகை தேர்வு- அறிவிப்பு
அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS கல்வி உதவித்தொகை தேர்வு- அறிவிப்பு
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு சார்பில் வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதித்தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதி தேர்வு:

தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதி தேர்வு மூலம் வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கான தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் தங்களின் தலைமை ஆசிரியர் மூலமாக பதிவிறக்கம் செய்து 08.01.2021ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!

NMMS தேர்வு விதிமுறைகள்:

21.02.2021 ம் தேதியன்று நடக்க இருக்கும் இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலுபவராக இருக்க வேண்டும். மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் தலைமை ஆசிரியரின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை தங்களின் பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்து விண்ணப்பக்கட்டணம் ரூ.50 சேர்த்து தலைமை ஆசிரியரிடம் 08.01.2021ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியருக்கான அறிவுரைகள்:

மேலும் இத்தேர்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் நடப்பாண்டில் எட்டாம் வகுப்பில் படிக்க வேண்டும் மற்றும் அவரின் பெற்றோரின் ஆண்டு வருமான சோதனை செய்ய வேண்டும் தேர்வு கட்டணத்தை முறையாக வசூலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!