அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு அறிவிப்பு!

இந்தியாவில், ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ள நிலையில், ஜார்கண்ட் அரசு அறிவித்திருக்கும் இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பழைய ஓய்வூதியம்:

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு ஆண்டுதோறும் போட்டி தேர்வுகளை நடத்தி இத்தகைய பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதை தவிர ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள் பணியை தொடர முடியாத நிலை அல்லது இறப்பினால் ஏற்படும் காலியிடத்தை அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு என்று தனிப்பட்ட சலுகைகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2004 ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த இயலாது என்று அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவினை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி கொண்டு வந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசுப் பள்ளி முதல்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – சுற்றறிக்கை வெளியீடு!

இதையடுத்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போதைய தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் இது குறித்து அரசு ஊழியர்களுக்கு நல்ல பதில் அளிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி அம்மாநில அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி, 1.9.2022 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!