தமிழக அரசுப் பள்ளி முதல்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – சுற்றறிக்கை வெளியீடு!

0
தமிழக அரசுப் பள்ளி முதல்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - சுற்றறிக்கை வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி முதல்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வீணாக இருக்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது ஏலம் மூலமாக அதற்கான தொகையை பெற வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பலவிதமான நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம், அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச படிப்பு, மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை என பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், நாளுக்கு நாள் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும், அரசுப் பள்ளிகளில் பல சேதமடைந்த பொருட்களை பள்ளியிலேயே வைத்துள்ளதால் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, அரசு பள்ளிகளில் பழுதாகி, உபயோகமில்லாமல் இருக்கும் மரச்சாமான்கள் மற்றும் இரும்பு பொருட்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் வகுப்பிற்கு வெளியே கிடக்கின்றன. இதனால், அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் வீணாக இருக்கும் பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி!

மேலும், பள்ளிக்கல்வி ஆணையரகம் பழுதடைந்த பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பள்ளியில் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொருட்களை ஏலம் மூலமாக விற்பனை செய்து அந்தத் தொகையை அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here