அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டு, தற்போது அதனை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய தொகை:

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில் அவர்களின் ஓய்வூதிய தொகை குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்ட சமயத்தில் தணிக்கை துறை நடத்திய ஆய்வின்போது குறிப்பிட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டது தெரிய வந்தது.

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்வது குறித்து ஓய்வூதிய ஆணையம் அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்பட கருவுலக கணக்கு துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னராக மாத ஓய்வூதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகைபிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நடவடிக்கைகள் எடுக்காமல் அரசுக்கு கூடுதலாக இழப்பு ஏற்படுத்தும் கருவூல அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை இதற்கு பொறுப்புதாரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய விதிகளின் படி கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதியமானது அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் சரி செய்து முடிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது பல ஆண்டுகள் கழித்து இதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!