தேசிய அளவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் – ஆளுநர் உரை!

0
தேசிய அளவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் - ஆளுநர் உரை!
தேசிய அளவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் - ஆளுநர் உரை!
தேசிய அளவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் – ஆளுநர் உரை!

தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாடு பல துறைகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.

சுதந்திர தின விழா:

தமிழகத்தில் 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். அதனை தொடர்ந்து காவல்துறை உள்பட 7 துறைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றார். தமிழக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுக்கும் காரணத்தால் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு எளிமையான முறையில் விழா நடைபெற்றது

RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செக் பரிவர்த்தனை மீறினால் அபராதம்!

இந்த விழாவில் அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் சென்னை ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின விழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆளுநர் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார். மேலும் சிறப்பு உரையாற்றினார். செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறினார். தமிழகத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற விளையாட்டு வீராங்கனையை வாழ்த்தினார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாநில வளர்ச்சிக்கு அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்றோரை வாழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில அரசின் அயராத முயற்சிகளின் பலனாக தமிழ்நாடு பல துறைகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது என்று கூறி ஆளுநர் பெருமிதம் அடைந்தார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!