RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செக் பரிவர்த்தனை மீறினால் அபராதம்!

0
RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - செக் பரிவர்த்தனை மீறினால் அபராதம்!
RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - செக் பரிவர்த்தனை மீறினால் அபராதம்!
RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செக் பரிவர்த்தனை மீறினால் அபராதம்!

காசோலை மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கான புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என RBI அறிவுறுத்தி உள்ளது.

RBI விதிமுறைகள்:

வங்கிகளில் அதிகளவு பண பரிவர்த்தனைகளுக்கு செக் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது செக் கிளியரிங் வசதியை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் காசோலை மூலம் பண பரிவர்த்தனைகளை பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்த நிலையில் வங்கி வேலை நாட்களில் மட்டுமே காசோலை பரிவர்த்தனை செய்யும் வசதி அமலில் இருந்தது. தற்போது மக்கள் அதிகமாக செக் பயன்படுத்தி வருவதனால் அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை செய்யும் நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – சுகாதாரத்துறை செயலர்!

எனவே பயனர்கள் காசோலை வழங்கும் முன் தங்கள் கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்து பின்னர் அனுப்பும் படி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. தற்போது அனைத்து நாட்களிலும் காசோலை பரிவர்த்தனை நடைபெறுவதால் சனிக்கிழமை கொடுத்த காசோலை ஞாயிற்றுக்கிழமையும் கிளியர் ஆகும். ஏற்கனவே காசோலை மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் பல்வேறு மாற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் அடிப்படையில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. காசோலை கொடுப்பதன் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. காசோலை தேதி, பணம் செலுத்தும் நபரின் பெயர், பணம் பெறுபவரின் விவரங்கள் மற்றும் தொகை ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டு, அந்த தகவலை SMS, மொபைல் செயலி, இணைய வங்கி அல்லது ATM போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!