அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்? அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

0
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்? அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோரிக்கை:

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி, ஓய்வூதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன் ஓய்வூதியதாரர்கள் உரிய பலன்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு வரலாறு காணாத அளவுக்கு பெய்த கன மழையால் வட மற்றும் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இத்தகைய சூழலில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட முழுமையாக வழங்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் தமிழக அரசு மக்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகிறது.

பேரிடர் காலத்தில் உடனடியாக களத்தில் இறங்கி பேருந்துகளை வழக்கம் போல பொதுமக்களுக்கு உதவி புரிந்தவர்கள் போக்குவரத்துறை தொழிலாளர்கள். அதே போல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும் பொதுமக்களுக்கும் இந்த நேரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு, இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே போராட்ட அறிவிப்பை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!