10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரசு வேலை – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அரசு வேலை – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு வேலை:

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் அளிக்கப்பட்ட தளர்வு காரணமாக பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட உள்ளது. அதில் சுழற்சி முறையில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணி முற்றிலும் பெண்களுக்காகவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் விபரங்களை பின்வருமாறு காணலாம்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? உண்மை நிலவரம் இதுதான்!

பணி: மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாப்பு காவலர் / ஓட்டுனர்

காலியிடங்கள்: 08

கல்வித்தகுதி: 10 / 12 / பட்டப்படிப்பு

வேலை வகை: தமிழக அரசு வேலை (ஒப்பந்த அடிப்படை)

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம் , பி4/107, சுப்ரமணிய புறம் தெரு , வ.உ.சி மைதானம் எதிரில் , திருவனந்தபுரம் ரோடு , பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627-002.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அமைச்சர் வெளியீடு!

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2022

நிபந்தனைகள்:

1. பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

3. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!