தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? உண்மை நிலவரம் இதுதான்!

0
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? உண்மை நிலவரம் இதுதான்!

தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருந்த செய்தி போலியானது என்று தற்போது அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது. அந்த செய்தியில் வரும் 5 ஆம் தேதி முதல் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு வயது குறைப்பு

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த பழனிசாமி அவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 வயதில் இருந்து 59ஆக உயர்த்தி இருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஓய்வு வயதை உயர்த்துவதன் மூலமாக அரசுக்கு ஓய்வூதிய பலன்களில் மிகப்பெரிய தொகை மிச்சமடைந்தது. ஆனால் இளைஞர்களின் அரசு வேலை எனும் கனவு கேள்விக்குறி ஆனது. இதற்கிடையில் கொரோனா 2வது அலையில் ஓய்வு வயது 60 ஆக அதிகரித்தது.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அமைச்சர் வெளியீடு!

பின்னர் 2001 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த ஒரு சில நாட்களிலேயே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. கூடுதலாக ஓய்வு வயதினை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது.

சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

அது என்னவென்றால் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட இருக்கிறது என்றும் இதற்கான அரசாணை வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த செய்தி போலியானது என்று தற்போது அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மக்கள் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் செய்தியின் உண்மை தன்மையினை ஆராய்ந்து அதன் பின்பு அதனை பகிர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!