திருமண கோலத்தில் கோபி ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இந்த வாரம்!

0
திருமண கோலத்தில் கோபி ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா -
திருமண கோலத்தில் கோபி ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா - "பாக்கியலட்சுமி" சீரியலில் இந்த வாரம்!
திருமண கோலத்தில் கோபி ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இந்த வாரம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்நிலையில் கோபி ராதிகா திருமணத்தில் பாக்கியா சமைக்க இருக்கும் நிலையில் உண்மை தெரிய வந்த பின் பாக்கியாவின் நிலைமை என்ன ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி உடன் பாக்கியாவிற்கு விவாகரத்தான பின் கூட பாக்கியாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஈஸ்வரி, செழியன், இனியா என மூவரும் சிறிய விசயத்திற்கு கூட பாக்கியாவை காரணம் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் பாக்கியா மன வருத்தம் அடைந்தாலும் கோபி இல்லாமல் குடும்பத்தை நல்லபடியாக நடத்த பணம் தான் தேவை என்பதால் அவர் தொழிலில் முன்னேற வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கிறார்.

செப்டம்பர் 22 க்குப் பிறகு இந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

அதனால் பெரிய தொழிலதிபர் நடத்திய நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட பாக்கியாவிற்கு திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டர் கிடைக்கிறது. அந்த தொழிலதிபரின் மண்டபத்தில் தான் கோபி, ராதிகாவின் திருமண ஏற்பாடுகளும் நடைபெற இருக்கிறது. அது மட்டுமில்லாமல் யாரும் எதிர்பாராத விதத்தில் பாக்கியா கோபியின் திருமண சமையல் ஆர்டரை எடுத்து செய்ய போகிறார். இந்த விஷயத்தை பற்றி தெரியாமல் பாக்கியா சமையல் ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இனி வரும் எபிசோடுகளில் பாக்கியா கோபி திருமணத்தில் சமைக்க போகிறார். அப்போது அவருக்கு நடக்க இருப்பது கோபி ராதிகாவின் திருமணம் என்ற உண்மை தெரிய வருகிறது. மணமக்களை பார்த்ததும் பாக்கியாவிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. கோபிக்கு தன்னை பிடிக்கவில்லை என்றாலும் இந்த அளவிற்கு முடிவு செய்வார் என பாக்கியா எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கோபியை பிரிய முடிவு செய்த பின் கவலைப்படக் கூடாது என்பதால் அவர் தனக்கு கொடுத்த ஆர்டரை சரியாக முடிக்க இருக்கிறார். அதனால் அடுத்த வார எபிசோடில் பாக்கியாவின் பரிதாப நிலை பற்றி காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here