Google Chat: இனி நோட்டிபிகேஷன் தொந்தரவு இல்லை.. ‘Do Not Disturb’ அம்சம் அறிமுகம்!!
கூகுள் தனது நிறுவனத்தின் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான கூகுள் சாட்டில் தற்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கூகுள் சாட்:
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது பயனர்களின் வசதியை அதிகரிப்பதற்காக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் அன்றாட நடைமுறை வாழ்வில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்து வருகிறது. சமீபத்தில் GMAIL ஸ்டோரேஜின் அளவு 15 GBயில் 1 TB அதிகரிக்க உள்ளதாக கூகுள் அறிவித்தது. அந்த வகையில், ஜிமெயிலில் பயன்படுத்தப்படும் கூகுள் சாட்டில் புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Exams Daily Mobile App Download
அதாவது கூகுள் சாட்டில் இனி பயனர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நோட்டிபிகேஷனை தடை செய்வதற்காக, Do Not Disturb என்ற என்ற ஆப்சனை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. இந்த Do Not Disturb அம்சத்தை நாம் முன்பே schedule செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் இணையத்திலும் அடுத்தகட்டமாக மொபைலிலும் இந்த அம்சம் வர உள்ளது. இந்த அம்சத்தை Android, iOS இரண்டிலும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.