வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி – டீசல் விலை 40 ரூபாய் குறைவு!

0
வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி - டீசல் விலை 40 ரூபாய் குறைவு!
வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி - டீசல் விலை 40 ரூபாய் குறைவு!
வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி – டீசல் விலை 40 ரூபாய் குறைவு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. அதனால் தற்போது இந்நாட்டில் டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு ரூ.40 குறைத்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீசல் விலை குறைவு:

உலக நாடுகளில் கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நிதி நெருக்கடி நிலை நிலவி வந்தது. இதற்கிடையே உக்ரைன் – ரஷ்யா போர் நிலவியதால் நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலகினார்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி வகித்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 120 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 97 டாலராக குறைந்துள்ளது. இதன் மூலமாக நாட்டில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.54 எனவும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து குறைந்து வரும் முட்டை விலை – மகிழ்ச்சியில் மக்கள்!

இந்த அதிரடி விலை குறைவை நாட்டில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நாட்டில் நேற்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் ஏற்கனவே அந்நிய செலாவணி கையிருப்பு முழுமையாக காலியாகி விட்டது. அதனால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைத்துள்ளது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!