தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களின் யாரவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு தங்கம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாலி தங்கம்

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகையும், அரசு துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும், மேலும் உயர்படிப்பிற்கு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு – ஜீன்ஸ் & சர்ட் அணிய முற்றிலும் தடை!

அதில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி திருக்கோவில் சார்பில் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் எனவும், அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!