ஒரே நாளில் சட்டென்று இறங்கிய தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.43, 840க்கு விற்பனை!

0
ஒரே நாளில் சட்டென்று இறங்கிய தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.43, 840க்கு விற்பனை!
ஒரே நாளில் சட்டென்று இறங்கிய தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.43, 840க்கு விற்பனை!
ஒரே நாளில் சட்டென்று இறங்கிய தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.43, 840க்கு விற்பனை!

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43, 840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதுமே கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விசேஷ தினத்தினை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5990க்கும், சவரனுக்கு ரூ.47, 920 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5520 க்கும், சவரனுக்கு ரூ. 44, 160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.5950 க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.47,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.5480 க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.43, 840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு – மாணவ, மாணவிகளுக்கான எச்சரிக்கை!

இதனையடுத்து, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1 குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் தங்கத்தின் விலை குறைய துவங்கியுள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!