நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை – உற்சாகத்தில் மக்கள்!

0
நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை - உற்சாகத்தில் மக்கள்!
நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை - உற்சாகத்தில் மக்கள்!
நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை – உற்சாகத்தில் மக்கள்!

தமிழக பெண்களுக்கு விருப்பமான பொருளாக தங்கம் இருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை ஒரு நாளுக்கு ஏற்றத்துடனும், ஒரு நாளுக்கு இறக்கத்துடனும் இருந்து வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

உலகளவில் அதிக விலை உயர்ந்த உலோக வகைகளில் ஒன்றாக தங்கம் இருக்கிறது. தங்கத்தை வெறும் அழகு ஆபரணமாக பார்க்காமல் அதை சேமிப்பாக பலர் நினைக்கின்றனர். ராஜா காலத்தில் இருந்து தங்கம் மீது மக்களுக்கு மோகம் குறையாமல் இருக்கிறது. மேலும் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கே தங்கத்தை விற்று அந்த நாட்டின் பணத்தை வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதனால் தங்கம் என்றாலே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று (அக். 14) தங்கம் விலையானது கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்! வரவுள்ள சூப்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்பதால் தங்கம் வாங்க இன்று நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் நகை வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே உகந்த நேரம் என தொழில் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!