ஜன.20 முதல் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது – அரசு முக்கிய அறிவிப்பு!

0
ஜன.20 முதல் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது - அரசு முக்கிய அறிவிப்பு!
ஜன.20 முதல் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது - அரசு முக்கிய அறிவிப்பு!
ஜன.20 முதல் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது – அரசு முக்கிய அறிவிப்பு!

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அவசரகால நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஜன.19) முடிவுக்கு வரும் என்று கமாண்டன்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிவு

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு திட்டமிட்டபடி ஜனவரி 19 ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக நகர தளபதி அலுவலகம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், உயர்மட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காலவரையின்றி அமலில் இருக்கும் என்று அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ‘அல்மாட்டியில் அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு ஜனவரி 19, 2022 அன்று முடிவடையும் என்று அல்மாட்டி கமாண்டன்ட் அலுவலகம் அறிவிக்கிறது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!

இதற்கிடையில், நகரம் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் ‘சிவப்பு’ மட்டத்தில் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம்’ என தெரிவித்துள்ளது. அதாவது கஜகஸ்தான் நாட்டில் ஜனவரி மாத தொடக்கத்தில் பெட்ரோலிய எரிவாயு விலையை இரு மடங்கு உயர்த்துவதை எதிர்த்து மக்கள் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அணிவகுத்துச் சென்றபோது முதல் முறையாக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை பிற்பாடு மோதலாக மாறியது.

எனவே, சூழ்நிலைகள் மோசமடைந்ததால் கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகேவ், ஜனவரி 5 அன்று அவசரகால நிலையை அறிவித்து, அல்மாட்டி மற்றும் மங்கிஸ்டாவ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை விதித்திருந்தார். இதே போல மற்ற இடங்களிலும் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையில் திட்டமிடப்பட்டபடி, வன்முறை சூழல் குறைந்ததால் ஜனவரி 19 ஆம் தேதிக்கு முன்பே பல பகுதிகளில் அவசரகால நிலை நீக்கப்பட்டது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – அசல் மதிப்பெண் சான்றிதழ்!

அந்த வகையில் 17 பிராந்தியங்களில் இதுவரை 10 பிராந்தியங்களில் ஊரடங்கு அகற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருக்கும் மற்ற 7 மாகாணங்களுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பிறகு தனிநபர் மற்றும் வாகனப் பரீட்சைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் 24 மணி நேரமும் நகரை கண்காணிப்பார்கள் என்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!