VI, Airtel மற்றும் Jio பயனர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் சலுகைகள் முழு விவரம்!

0
VI, Airtel மற்றும் Jio பயனர்கள் கவனத்திற்கு - ப்ரீபெய்ட் சலுகைகள் முழு விவரம்!
VI, Airtel மற்றும் Jio பயனர்கள் கவனத்திற்கு - ப்ரீபெய்ட் சலுகைகள் முழு விவரம்!
VI, Airtel மற்றும் Jio பயனர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் சலுகைகள் முழு விவரம்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது மக்கள் மத்தியில் மிக முக்கிய இடங்களை வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு அளிக்கும் குறைந்த விலையிலான ப்ரீபெய்ட் திட்ட சலுகைகள் குறித்து விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ப்ரீபெய்ட் சலுகைகள்:

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பயனர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் குறைந்த விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.109 கான புதிய ப்ரீபெய்ட் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ரூ.99 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 18 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – யூனியன் அரசு!

அதேபோல் ரூ.109 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும். இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.98க்கு திட்டம் ஒன்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்றாட டேட்டா முடிந்த பின் இணைய வேகம் குறைக்கப்படும். கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எம்எம்எஸ் வசதியும் அளிக்கப்படுகிறது.

Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

இந்த திட்டமானது 14 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.129க்கு திட்டம் ஒன்றை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிகளின் உபயோகமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும். இது போல் அனைத்து நிறுவனங்களும் தனது பயனர்களுக்கு குறைந்த விலையில் சலுகைகளை வழங்குவதால் பயனர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!