CSK ரசிகர்களுக்கு ஷாக் – முதல் சில ஆட்டங்களை தவறவிடும் வீரர்கள்! முழு விபரம் இதோ!

0
CSK ரசிகர்களுக்கு ஷாக் - முதல் சில ஆட்டங்களை தவறவிடும் வீரர்கள்! முழு விபரம் இதோ!
CSK ரசிகர்களுக்கு ஷாக் - முதல் சில ஆட்டங்களை தவறவிடும் வீரர்கள்! முழு விபரம் இதோ!
CSK ரசிகர்களுக்கு ஷாக் – முதல் சில ஆட்டங்களை தவறவிடும் வீரர்கள்! முழு விபரம் இதோ!

IPL 2022 போட்டிகளின் புதிய சீசன் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்கள் முதல் சில ஆட்டங்களை தவற விட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதியன்று கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த சீசனில் 8 நட்சத்திர அணிகளுடன் புதிதாக 2 அணிகளும் இணைந்திருப்பதால் போட்டிகள் புதிய முறையில் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இப்போது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்கள் சிலர் முதல் ஆட்டத்தை தவற விட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!

அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி இந்த சீசனின் முதல் போட்டியில் இருக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது மொயீன் அலிக்கு இந்திய விசா கிடைக்காததால் அவர் தற்போது லண்டனில் சிக்கி இருக்கிறார். இப்போது அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், மொயீன் அலியின் விசா தாமதமானது குறித்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

இருப்பினும் மொயின் அலி இந்தியா வந்தவுடன் 3 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று தெரிகிறது. அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு நட்சத்திரம் தீபக் சஹாரும் காயம் காரணமாக இந்த சீஸனின் பாதி ஆட்டங்களை தவறவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கூடுமானால் அவர் முழு சீசனில் இருந்து விலகிக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கிடையில், இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் பல்வேறு காரணங்களுக்காக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் RCB வீரர் க்ளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் திருமணம் செய்திருப்பதால் அவர் ஐபிஎல் 2022ன் ஆரம்ப ஆட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!