ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
புதுவையில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தினால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய தளர்வாக கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை ஊரடங்கு:
புதுவையில் கடந்த மூன்று மாத காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவாக வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் புதுவை அரசு ஊரடங்கில் இருந்து பல கட்ட தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி வருகிறது. இந்நிலையில் புதுவை அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்து கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 15 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு!
புதிய தளர்வாக சுற்றுலா, வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க புதுவை அரசு அனுமதி வழங்கியது. அதேபோல் புதுவையில் பிரசித்தி பெற்ற கடற்கரை சாலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் காலை நேரத்தை, விட மாலையில் அதிக அளவிலான மக்கள் வருகை தருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
ஊரடங்கு காலத்திற்கு பின்பு இத்தகைய தளர்வுகள் புதுவையில் அளித்திருப்பது பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று புதுவை அரசு அறிவுறுத்தியுள்ளது.