இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச C.A பயிற்சி – C.A தென்னிந்திய மைய தலைவர் அறிவிப்பு!!

0
இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச C.A பயிற்சி - C.A தென்னிந்திய மைய தலைவர் அறிவிப்பு!!
இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச C.A பயிற்சி - C.A தென்னிந்திய மைய தலைவர் அறிவிப்பு!!
இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச C.A பயிற்சி – C.A தென்னிந்திய மைய தலைவர் அறிவிப்பு!!

தமிழக அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சிக்கு இன்று முதல் இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி அறிவித்துள்ளார்.

இலவச பயிற்சி:

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம் – பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு!!

தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிஏ தேர்வுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாத சிஏ தேர்வுக்கு இன்று முதல் (ஜூன் 9) தொடங்கி அக்டோபர் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. தினமும் 5 மணி நேரம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக ரூ.9,500 கட்டணமாகும். ஆனால் தமிழக அரசின் பள்ளி மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கட்டணமின்றி இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் http://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய விரும்பினால் 7358506400, 8220522669, 9677126011 என்ற தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!