தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி உயர்வு? மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி உயர்வு? மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி உயர்வு? மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி உயர்வு? மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் பொதுவாக ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு ஆண்டுதோறும் 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்கள் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம் ,சென்னை,கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கொண்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது.

பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் – கொரோனா பரவல் எதிரொலி! புதுச்சேரி அரசு அதிரடி!

இந்த தடைக்காலத்தில் எந்தவொரு விசை படகுகளும் கடலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. அதனால் மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களின் வாழ்வாதார ஆதாரமாக விளங்கும் மீன்களைப் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பாக இவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் அத்தியாவசிய செலவுகள் ஆகியவற்றிற்காக மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!