ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!

0
ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு - தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!
ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு - தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!
ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!

மத்திய அரசால் வழங்கப்படும் அடையாள அட்டையான ஆதாரை வைத்து பல மோசடிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை முறைகேடாக பயன்படுத்தினால் 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், தனிநபர் சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும்.ஆதாரில் தேவைக்கேற்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த ஆதார கார்டை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வு தேர்வு விடைக்குறிப்பு!

இதனையடுத்து ஆதார் கார்டை முறைகேடாக பயன்படுத்தினால் 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI இன் தண்டனை விதிகள் அறிவிப்பின் படி ஒழுங்குமுறைகள் அல்லது வழிகாட்டுதல் களுக்கு இணங்க தவறியதற்காக ஒரு நிறுவனத்திற்கு எதிராக புகாரை மேற்கொள்ளலாம் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மக்களின் தனியுரிமையை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்பின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றவும் விதிகள் உள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை!

அதே போல ஆதாரில் சிவில் குற்றங்களுக்காகவும் தனிப்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை முறைகேடாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், தண்டனை விதிக்கப்படும் என்று UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. புகார்களை ஆய்வு செய்து, உரிய முடிவுகளை மேற்கொள்ளப்படும்.தவறான பயோமெட்ரிக் மற்றும் இருப்பிடத் தகவலை வழங்குபவர்கள் ஆதார் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார்கள்.இவர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!