உலகக்கோப்பை காற்பந்து வரலாறு

0

உலகக்கோப்பை காற்பந்து வரலாறு

உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் வெற்றியீட்டியது.

உலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள 21 உலக கோப்பை போட்டிகளில் எட்டு(8) வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து (5) முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனி, இத்தாலி ஆகியவை நான்கு (4) முறையும், அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ் (2018) ஆகியவை இரண்டு (2) முறையும், இங்கிலாந்து,  எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.

அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டி 2022 – கத்தாரில் நடைபெறவுள்ளது.

பிபாவின் தலைவர் – ஜியனி இன்பண்டினோ (சுவிச்சர்லாந்து / இத்தாலி) – 2016 ல் இருந்து தற்போது வரை.

பொதுச்செயலர் – பாத்திமா சமௌரா (செனகல்) – 2016 ல் இருந்து தற்போது வரை.

கால்பந்து உலக கோப்பை சாம்பியன்ஸ் பட்டியல்

ஆண்டுநடத்திய நாடுவெற்றியாளர்
1930உருகுவேஉருகுவே
1934இத்தாலிஇத்தாலி
1938பிரான்ஸ்இத்தாலி
1950பிரேசில்உருகுவே
1954சுவிச்சர்லாந்துமேற்கு ஜெர்மனி
1958ஸ்வீடன்பிரேசில்
1962சிலிபிரேசில்
1966இங்கிலாந்துஇங்கிலாந்து
1970மெக்ஸிக்கோபிரேசில்
1974மேற்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி
1978அர்ஜென்டீனாஅர்ஜென்டீனா
1982ஸ்பெயின்இத்தாலி
1986மெக்ஸிக்கோஅர்ஜென்டீனா
1990இத்தாலிமேற்கு ஜெர்மனி
1994ஐக்கிய மாநிலங்கள்பிரேசில்
1998பிரான்ஸ்பிரான்ஸ்
2002தென் கொரியா & ஜப்பான்பிரேசில்
2006ஜெர்மனிஇத்தாலி
2010தென் ஆப்பிரிக்காஸ்பெயின்
2014பிரேசில்ஜெர்மனி
2018ரஷ்யாபிரான்ஸ்
2022கத்தார்????
2026கனடா, மெக்ஸிக்கோ, அமெரிக்கா????

ஃபிஃபா உலக கோப்பை சாம்பியன்ஸ் அணி

நாடுஉலக கோப்பை எண்ணிக்கை
பிரேசில்5
இத்தாலி4
மேற்கு ஜெர்மனி 4
உருகுவே2
அர்ஜென்டீனா2
இங்கிலாந்து1
பிரான்ஸ்2
ஸ்பெயின்1
மொத்தம்21

பிபா தங்க பந்து, தங்க காலணி விருது வாங்கியவர்கள்

ஆண்டுதங்க பந்துதங்க காலணி
1982பாவ்லோ ரோஸ்ஸிபாவ்லோ ரோஸ்ஸி
1986டியாகோ மரடோனாகேரி நேன்கர்
1990சால்வடோர் ஷில்லாயிசால்வடோர் ஷில்லாயி
1994ரோமரியோஒலெக் சலென்கோ & ஹிஸ்டோ ஸ்டோய்க்கோவ்
1998ரொனால்டோடிவவர் சுக்கர்
2002ஆலிவர் கான்ரொனால்டோ
2006ஜினினின் ஜிதேன்மியோஸ்லாவ் க்ளோஸ்
2010டியாகோ ஃபோர்லன்தாமஸ் முல்லர்
2014லயோனல் மெஸ்ஸிஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்
2018லூகா மாட்ரிக் (குரோஷியா)ஹாரி கேன் (இங்கிலாந்து)

PDF பதிவிறக்கம் செய்ய

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here