பிப்ரவரி 12-ல் தமிழக கூட்டத்தொடர்… 19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் – அரசு வெளியிட்ட உத்தரவு!

0
பிப்ரவரி 12-ல் தமிழக கூட்டத்தொடர்... 19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் - அரசு வெளியிட்ட உத்தரவு!

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தேதி தொடங்கப்படும் எனவும், பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கூட்டத்தொடர்:

முந்தைய ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒரு சில காரணங்களால் முடிவடையாமல் இழுத்தடிக்கப்பட்டது. மேலும் அப்பொழுது ஆளுநருடன் ஏற்பட்ட விவாததால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறுமா என சர்ச்சைகள் வெளியாகி கொண்டு இருந்து. இந்நிலையில் இவ்வனைத்து சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டும் விதமாக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு கூட்டத்தொடரை முடித்து வைத்தார். பின் நடப்பாண்டுக்கான முதல் தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாளை அறிவிக்குமாறு அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

SSC Head Constable (AWO / TPO) தேர்வின் மதிப்பெண் பட்டியல் – வெளியீடு!

இதனை கருத்தில் கொண்டு சபாநாயகர் அப்பாவு வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும், பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!