கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

0
கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு - பயணிகள் அதிர்ச்சி!
கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு - பயணிகள் அதிர்ச்சி!
கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலமான கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கட்டண உயர்வு:

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான, “மலைகளின் இளவரசி “என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை களிக்கவும், மனதை அமைதிப்படுத்தி கொண்டு மகிழ்ச்சியாக சுற்றி பார்க்கவும் நிறைய இடங்கள் உள்ளன. இதில் குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள் மற்றும் ஏரிக்கரை போன்ற இடங்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ.250 க்கு கீழ் உள்ள Jio, Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

இதில், பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக கொடைக்கானல் ஏரி உள்ளது என்பதே உண்மை. ஏனெனில், இங்கு ஏரிக்கரை சூழலை ரசித்தபடி படகு சவாரி செய்யவும், கரையைச் சுற்றி சைக்கிள் பயணம் மற்றும் குதிரை பயணம் செய்ய வாய்ப்புகள் இருப்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பும், ஆவலும் இருக்கும். இந்த நிலையில், ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படும். இந்த வசூலில் முறைகேடு நடப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதில், வார நாட்களில் படகில் பயணம் செய்ய 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், இதுவே வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 150-ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வரிசையில் நிற்காமல் அந்த இடத்திற்கு சென்ற உடனே படகில் ஏறுவதற்கு ரூ.250 கட்டணமாக வாங்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த முறையில்லாத கட்டண உயர்வு பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!