ரூ.250 க்கு கீழ் உள்ள Jio, Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

0
ரூ.250 க்கு கீழ் உள்ள Jio, Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம்!
ரூ.250 க்கு கீழ் உள்ள Jio, Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம்!
ரூ.250 க்கு கீழ் உள்ள Jio, Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vi ஆகியவற்றில் ரூ.250 க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ப்ரீபெய்ட் திட்டம்:

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல், ஜியோ, மற்றும் விஐ என பல்வேறு நெட்ஒர்க் சேவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மாதம் அதாவது 28 நாட்கள், 54 நாட்கள் மற்றும் 84 நாட்களுக்கான பிளான் என அனைத்து தரவுகளையும் நெட்ஒர்க் சேவை நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு என தங்கள் சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ரூ.250 க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களின் விபரங்களை காணலாம்.

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

ஜியோ நெட்வொர்க் சேவையானது 250 ரூபாய்க்கு கீழ் ரூ.199 மற்றும் ரூ.247 திட்டத்தை வழங்கி வருகிறது. ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீரும் பட்சத்தில் ஜியோ பயனர்கள் குறைந்த வேகத்துடன் இன்டர்நெட் வசதியை பெறுவர். இந்த திட்டத்தின் அடிப்படையில் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நெட்ஒர்க்களுடன் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதே போல் ரூ.247 திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் இல்லாமல் மொத்தமாக 25 ஜிபி டேட்டா உடனே அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்தில் 250 ரூபாய்க்கு கீழ் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

விஐ நிறுவனம் 250 ரூபாய்க்கு கீழ் ரூ.249 மற்றும் ரூ.219 திட்டத்தை வழங்கி வருகிறது. வோடபோன் மற்றும் ஐடியா பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா உடன் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் ரூ.219 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா உடன் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!