‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவை கலாய்க்கும் ரசிகர்கள் – எல்லார்கிட்டயும் அறை வாங்குறீங்களே!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பாவை கலாய்க்கும் ரசிகர்கள் - எல்லார்கிட்டயும் அறை வாங்குறீங்களே!
'பாரதி கண்ணம்மா' வெண்பாவை கலாய்க்கும் ரசிகர்கள் - எல்லார்கிட்டயும் அறை வாங்குறீங்களே!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவை கலாய்க்கும் ரசிகர்கள் – எல்லார்கிட்டயும் அறை வாங்குறீங்களே!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் வெண்பாவின் கதாபாத்திரம் பற்றிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதிகண்ணம்மா சீரியல்

தமிழ் சீரியல்களில் எப்போதுமே டாப்பில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் மட்டும்தான். காரணம் இந்த சீரியலின் கதைக்களம் அப்படி. அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவர்கள் அனைவரும் எதார்த்தமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் தங்களது கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த விதத்தில் எப்படி பாரதி கதாபாத்திரத்தில் அருண், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வருகின்றனரோ அதேபோல் வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரினா நடித்து வருகிறார்.

பாக்கியாவை அம்ரிதா வீட்டிற்கு அழைக்கும் எழில் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!

இந்த கதாபாத்திரத்தில் முதலில் அவர் நடிப்பதற்கு மிகவும் தயங்கினாராம். காரணம் வெண்பா கதாபாத்திரம் மிகவும் நெகட்டிவான ரோல். ஆனாலும் துணிந்து நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே இவர் மிகவும் புகழ் அடைந்து இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் பாரதியை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். பாரதிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவரை காதலித்து வருகிறார். இதன் காரணமாக பலமுறை பலரிடம் அறை வாங்கியிருக்கிறார். முதன்முதலாக கண்ணம்மாவிடம் பாரதி பற்றி தப்பாக கூறியதற்காக வாங்கியிருக்கிறார்.

புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

தற்போது கடைசியாக சௌந்தர்யா இனி தனது குடும்பத்தின் பிரச்சினைகளில் தலையிட கூடாது என்று கூறி வெண்பாவை அறைந்து இருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி அறை வாங்கி அறை வாங்கி காதலிக்கணுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அது குறித்த ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!