பார்வையிலேயே மிரட்டும் பகத் பாசில் – புஷ்பா படத்தின் லுக்!

0
பார்வையிலேயே மிரட்டும் பகத் பாசில் - புஷ்பா படத்தின் லுக்!
பார்வையிலேயே மிரட்டும் பகத் பாசில் - புஷ்பா படத்தின் லுக்!
பார்வையிலேயே மிரட்டும் பகத் பாசில் – புஷ்பா படத்தின் லுக்!

வரும் டிசம்பர் மாத வெளியாக இருக்கும் புஷ்பா என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் பகத் பாசிலின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பார்வையாலேயே மிரட்டுவதை போல் உள்ளது.

புஷ்பா பார்ட் 1:

கேரளா மாநிலத்தை சேர்ந்த திறமை வாய்ந்த நடிகர் பகத் பாசில். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தற்போதைய காலகட்டத்தில் உள்ள நடிகர்களில் இவர் முன்னணியில் உள்ளார் என்றே கூறலாம். சமீபத்தில் இவர் நடித்து ஓடிடியில் வெளியான அவரது ஜோஜி, மாலிக் படங்கள் அவரது நடிப்புத் திறனை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்தது. இவர் கதையின் நாயகனாக மட்டுமல்லால் வில்லனாகவும் பல படங்களில் நடித்து கவனிக்க வைத்துள்ளார்.

மதுரை மேம்பால கட்டுமான விபத்து – நிதி அமைச்சர் நேரில் ஆய்வு!

இவர் தற்போது தெலுங்கில் அல்லி அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை சுகுமார் இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு, அதனை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடிக்க வைத்தனர். இப்போது பகத் பாசிலின் வில்லன் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மொட்டைத் தலை, அதில் வெட்டுத் தழும்பு என மனிதர் பார்வையிலேயே மிரட்டுகிறார்.

TN Job “FB  Group” Join Now

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் மதிப்புமிக்க மரங்களை கடத்துபவராக நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில் பகத் ன் இடுப்பில் இருக்கும் பிஸ்டலில் இருந்து, அவர் வனத்துறை அதிகாரியாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் புஷ்பாவின் முதல் பாகம் வெளியாகிறது. இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வெளியாகிறது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த முன்னணி நடிகர்கள் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு புஷ்பா படத்திற்கு கிளம்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!