தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

0
தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் விரைவு பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் பேருந்துகள்:

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதன்படி சென்னை போன்ற தொலை தூரங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அப்படி இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்படுகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று முற்றிலுமாக தீரும் வரையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அமைச்சர் தகவல்!!

இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழலில் பகல் நேரங்களில் அதிகபட்ச பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் நேற்று 16,284 பேருந்துகள், 345 விரைவுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 2,790 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அரசு பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here