தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு – மின்சார வாரியம் அறிக்கை!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு மே மாதம் 24 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு நேரடியாக சென்று மின் அளவீடு செய்யாமல் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது கணக்கீடு அளவை தெரிவித்து மின்கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல் – பொதுமக்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
இந்நிலையில், மின் கட்டணம் செலுத்த மே 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை உள்ள அவகாசம் உள்ளவர்கள், ஜூன் 15 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அதில், தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு ஜூன் 14 வரை நீடிக்கப்பட்ட நிலையில், தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர் கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு மின் கட்டணம் செலுத்த மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி ஜூன் 15 வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.