“சென்னை பஸ்” செயலி திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
"சென்னை பஸ்" செயலி திட்டம் விரிவாக்கம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்!
“சென்னை பஸ்” செயலி திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

சென்னை மாநகர பேருந்துகள் இயங்கும் நேரம், இடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள “சென்னை பஸ்” என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பேருந்து செயலி:

தலைநகர் சென்னையில் பேருந்து புறப்படும் நேரம், பயணம் குறித்த விவரங்களை அறிய “சென்னை பஸ்” என்ற செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பேருந்துகள் குறித்த அனைத்து விவரங்களையும் அறியலாம். தற்போது இந்த சேவையை விரிவுபடுத்த போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

ஏறிய வேகத்திலேயே சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.720 குறைவு – மகிழ்ச்சியில் மக்கள்!

Follow our Instagram for more Latest Updates

அதாவது அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் GPS கருவி பொருத்தப்பட்டு பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம், நேரம் ஆகியவற்றை பயணிகள் எளிதில் அறியும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு SMS அனுப்பப்படும்.

அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து அவர்கள் முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளலாம். மேலும் இச்செயலி தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!