ஏறிய வேகத்திலேயே சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.720 குறைவு – மகிழ்ச்சியில் மக்கள்!

0
ஏறிய வேகத்திலேயே சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.720 குறைவு - மகிழ்ச்சியில் மக்கள்!
ஏறிய வேகத்திலேயே சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.720 குறைவு - மகிழ்ச்சியில் மக்கள்!
ஏறிய வேகத்திலேயே சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.720 குறைவு – மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.43,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

தங்கம் விலை:

பங்குச்சந்தைகளின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை நெருங்கியது. அதனால் நகை வாங்க நினைப்பவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இன்று காலை நிலவரப்படி அபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் மக்கள் சற்று நிம்மதியில் இருந்தனர். மேலும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.43520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை (பிப். 4) பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

அதனை தொடர்ந்து இன்று (பிப்.3) மாலை தங்கம் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. அதன் படி தங்கம் விலை ரூ.720 குறைந்து ரூ.43,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து 5,415 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை குறைந்ததால் மக்கள் நிம்மதியில் இருக்கின்றனர். மேலும் 10 நாட்களில் தங்கம் விலை அதிகரித்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க இதுவே சரியான நேரமாக கருதப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!