தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் – நிபுணர்கள் பரிந்துரை!!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் - நிபுணர்கள் பரிந்துரை!!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் - நிபுணர்கள் பரிந்துரை!!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் – நிபுணர்கள் பரிந்துரை!!

தமிழகத்தில் வருகின்ற 7ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வு:

தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 24ம் தேதிக்கு பின்பு தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் 7ம் தேதி உடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நிபுணர் குழு தளர்வுகள் அளிப்பது குறித்து பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அவர்கள் கூறியதாவது, சென்னை உட்பட பெரிய நகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மேற்கு மண்டலத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று முதல் ஜூன் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – போக்குவரத்துக்கு அனுமதி!!

இந்நிலையில் குறைந்த பாதிப்பு விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட மாவட்டங்களில் ஊரடங்கு விதிப்பது அவசியமில்லை. மாவட்ட அளவிலான பாதிப்பை கொண்டு தளர்வுகள் அளிப்பது குறித்தும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வித்தியாசமான பாதிப்புகள் நிலவுவதால் தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை படிப்படியாக அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!