முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு – டிஜிபி ஆணை!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காலத்தில் பெண் காவலர்களுக்கு சில பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இனி பெண் காவலர்களுக்கு முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார்.
பெண் காவலர்கள்:
தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய் தொற்று மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை பாதுகாப்பு பணியில் காவலர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் பெண் காவலர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண் காவலர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் அவர்களுக்கு சில பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அதேபோல் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும் அதிக பணிச்சுமை உள்ள பணிகளை வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மேலே குறிப்பிட்டவர்களுக்கு களத்திற்கு நேரடியாக சென்று பணியாற்ற கூடிய பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெண் காவலர்களை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட அனுமதி – முதல்வர் உத்தரவு!
இதை அடுத்து டி.ஜி.பி திரிபாதி ஓர் ஆணை பிறப்பித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, முதல் அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் பெண் காவலர்களை நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதது. தற்போது இந்த அறிக்கை பெண் காவலர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.